என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

தேவதானப்பட்டி பகுதியில் நூதன முறையில் பெண்களிடம் நகை பறிக்கும் கொள்ளையர்கள்

தேவதானப்பட்டி:
பெரியகுளம் வடகரை செக்கடி தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மனைவி தேவி(வயது29). இவரது சகோதரி பாண்டீஸ்வரி. தேவதானப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். அவருக்கு உதவி செய்ய தேவி சென்றுள்ளார்.
சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மதுரையை சேர்ந்தவர் அருண்குமார் மனைவி அஞ்சலி. மஞ்சளாறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு ஊர்திரும்பி கொண்டிருந்தார். அரிசிக்கடை பஸ்நிறுத்தம் அருகே 4 பெண்கள் அஞ்சலியுடன் பஸ்சில் ஏறியுள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த பெண்கள் இறங்கி சென்றுள்ளனர். அஞ்சலி தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் தங்கசங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் நகை அணிந்து வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.