search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வாடகை பாக்கி வைத்துள்ள 30 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’
    X

    திருப்பூரில் வாடகை பாக்கி வைத்துள்ள 30 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’

    திருப்பூரில் வாடகை பாக்கி வைத்துள்ள 30 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்கள் மாதந்தோறும் மாவட்ட டாஸ்மாக் நிறுவனத்திற்கு வாடகை செலுத்த வேண்டும். இதன்படி மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் பார்களுக்கான வாடகையை செலுத்தி வருகின்றனர். ஆனால் பல டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாடகையை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த பார்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம், யூனியன் மில்ரோடு, அவினாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான பார்கள் வாடகை பாக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வாடகை செலுத்தாத டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 30 டாஸ்மாக் பார்களுக்கு சென்றனர். பின்னர் அந்த பார்களின் கதவுகளுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர்.

    இது போல உரிமம் புதுப்பிக்காத, முறைகேடாக இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாடகை தொகையை கட்டிய பின்னர் மீண்டும் வழக்கம் போல இந்த பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×