என் மலர்

    செய்திகள்

    பெரியகுளத்தில் இளம்பெண் திடீர் மாயம்
    X

    பெரியகுளத்தில் இளம்பெண் திடீர் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியகுளத்தில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    பெரியகுளம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் மணி மகள் சங்கீதா(வயது21). சம்பவத்தன்று மணி வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்துபார்த்தபோது சங்கீதா வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்த செல்லபாண்டி என்பவர்தான் தனது மகளை கடத்தியிருக்ககூடும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே பாலூத்து பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது35). இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். சம்பவத்தன்று கூலிவேலைக்கு செல்வதாக வேல்முருகன் வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பாண்டீஸ்வரி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் வேல்முருகன் மாயமானதால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×