என் மலர்

  செய்திகள்

  தென்காசியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  X

  தென்காசியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவர்கள் சங்கத்தினர் தென்காசியில் கோட்டாட்சி தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  தென்காசி:

  வருவாய்துறை அலுவர்கள் சங்கத்தினர் தென்காசியில் கோட்டாட்சி தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். துணை ஆட்சியர் பதவி பட்டியலை உடனடியாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வருவாய்துறை பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் கல்யாணக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி வட்டக் கிளைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைசிங், நிர்வாகி திருமலைமுருகன், தென்காசி துணை வட்டாட்சியர்கள் ரவீந்திரன், அழகப்பராஜா, அரவிந்த், மாரியப்பன் மற்றும் தென்காசி வட்டக்கிளை நிர்வாகிகள் ஜெகன், மாரிச்செல்வம், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

   ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் நாளை (28-ந் தேதி) நாகர்கோவிலில் நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான முடிவுகளை எடுத்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர். முடிவில் வட்டகிளைத் தலைவர் ஆறுமுகம்  நன்றி கூறினார்.
  Next Story
  ×