என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி பேனர் தொடர்ந்து கிழிப்பு- போலீஸ் பாதுகாப்பு
    X

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி பேனர் தொடர்ந்து கிழிப்பு- போலீஸ் பாதுகாப்பு

    மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தொடர்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை 12-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதையொட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையிலும், பழைய மாமல்லபுரம் சாலையிலும் 500-க்கும் மேற்பட்ட விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    பிரதமர் மோடி வருகைக்கு தி.மு.க. உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ கண்காட்சி குறித்து கிழக்கு கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்று விட்டனர்.

    பேனர்கள் கிழிக்கும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ராணுவ கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டு உள்ளது. கோவளம்- திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் மோடி வந்திறங்கும் ஹெலிபேடு தளம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் கிழித்து சென்றுள்ளனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் தற்போது பேனருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “இதுவரை பேனர்கள் கிழித்திருப்பதாக கட்சியினரோ, ராணுவத்தினரோ புகார்கள் தரவில்லை. பேனர்கள் அனைத்தும் காற்றில் கிழிந்துள்ளது” என்று தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×