என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே லாரியில் மணல் கடத்தல் - 4 பேர் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திற்கு புகார் வந்தது. அவரும் போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்திய கோளிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் அடுத்த வளத்தோட்டம், மாகரல் மின்வாரிய அலுவலகம் அருகில் மாட்டுவண்டி மற்றும் லாரியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரனுக்கு புகார் வந்தது. அவர் போலீசாருடன் அங்கு விரைந்தார்.
அப்போது வளத்தோட்டம் பகுதியில் மணல் கடத்திய தூசி பகுதியை சேர்ந்த குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மாகரல் மின்வாரியம் அருகில் லாரியில் மணல் கடத்தி வந்த காவனூர்புதுச்சேரி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (36), ஊரல் கிராமத்தை சேர்ந்த கிளீனர் அருள்முருகன் (22) ஆகியோரையும் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்






