search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு போட்டி
    X

    நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு போட்டி

    அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    இதில்  671 காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளைகள் முட்டித் தள்ளியதில் 11 பேர் காயமடைந்தனர். 

    ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, மாவ ட்ட வருவாய் ஆய்வாளர் ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, விளத்துப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் பாலவேல்முருகேசன், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், வழக்கறிஞர் விளத்துப்பட்டி இளங்கோவன் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
    Next Story
    ×