என் மலர்

  செய்திகள்

  வாரியம் வரும் என்றால் ராஜினாமா செய்ய தயார் - பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
  X

  வாரியம் வரும் என்றால் ராஜினாமா செய்ய தயார் - பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜினாமா செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் வந்துவிடும் என்றால் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #CauveryManagementBoard #PonRadhakrishnan
  சென்னை:

  மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  காவிரி பிரச்சனையை இந்த அளவுக்கு மோசமாக எடுத்துச் சென்றதற்கு முழு காரணம் காங்கிரஸ். கர்நாடகத்தில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், இதற்கு முன்பு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசாங்கம்.  இவர் (நவநீதகிருஷ்ணன் எம்பி.) தற்கொலை செய்யப்போவதாக கூறுகிறார். அவர் வீட்டில் உள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்களா? கட்சிக்கார்கள் ஒத்துக்கொள்வார்களா? தமிழ்நாடு ஒத்துக்கொள்ளுமா? அல்லது விவசாயிகள்தான் ஒத்துக்கொள்வார்களா?

  எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை ஏமாற்றவேண்டும்? இப்போது நடந்துகொண்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல். இந்த அரசியலுக்குள் நாம் போக தயாராக இல்லை. எங்களைப் பொருத்தவரை  டிராமா போட தயாராக இல்லை.

  ராஜினாமா செய்தால் எல்லாம் வந்துவிடும் என்றால் நானும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். ராஜினாமா செய்வது என்பது ஒரு முடிவு அல்ல. அப்படி நான் முடிவெடுத்தேன் என்று சொன்னால் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எழுதி அடுத்த நிமிடமே கொடுத்துவிட்டு செல்வேன்.

  இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். #CauveryManagementBoard #PonRadhakrishnan
  Next Story
  ×