search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரங்கம்பாடி அருகே எச்.ராஜாவுக்கு கருப்பு கொடி காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    தரங்கம்பாடி அருகே எச்.ராஜாவுக்கு கருப்பு கொடி காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த எச். ராஜாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டூவிட்டர் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் எச்.ராஜாவை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் மற்றும் அவரது உருவப்படம் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள திருக்கடையூரில் அவரது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எச்.ராஜா திருக்கடையூர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். இது குறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருக்கடையூர் கோவில் முன்பு திரண்டு எச்.ராஜா வந்த போது கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருக்கடையூர் கோவிலில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் மக்கள் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×