என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
    X

    விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

    விருத்தாசலம் அருகே காதலி இறந்த கவலையில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புது விளாங்குளத்தை சேர்ந்தவர் வீரசெல்வன் (வயது 21), ஐ.டி.ஐ. படித்து முடித்திருந்தார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சசிகலா (20) வும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சசிகலா விஜயமாநகரம் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசில் சசிகலாவின் தந்தை புகார் செய்தார். அதில் சசிகலாவின் தற்கொலைக்கு வீரசெல்வன்தான் காரனம் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரசெல்வத்தை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீரசெல்வன் ஜாமீனில் வெளியே வந்தார். தனது காதலி தற்கொலை செய்து கொண்ட இடமான விஜயமாநகரத்துக்கு இன்று காலை சென்றார். அப்போது அந்த வழியாக ரெயில் வந்தது. தன் காதலியைபோல் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உடல் துண்டாகி பிணமாக கிடந்த வீரசெல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×