என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் தினம்- 3 விமானங்களை இயக்கிய பெண் விமானிகள்
    X

    மகளிர் தினம்- 3 விமானங்களை இயக்கிய பெண் விமானிகள்

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்களை பெண் விமானிகள் இயக்கினர்.
    ஆலந்தூர்:

    உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்களை பெண்களே இயக்க ஏர்-இந்தியா விமானம் ஏற்பாடு செய்து இருந்தது.

    அதன்படி இன்று அதிகாலை 5.05 மணிக்கு அந்தமான் செல்லும் விமானத்தை விமானி தீபா ஸ்த்யா தலைமையிலான குழுவினர் இயக்கினர். இந்த விமானம் அந்தமான் சென்று அங்கிருந்து காலை 10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு வந்தது.

    இதேபோல் காலை 5.55 மணிக்கு இலங்கைக்கு சென்ற விமானத்தை விமானிகள் ரூபா, நிமிஷா ஆகியோர் இயக்கினர். இந்த விமானம் மீண்டும் காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது.



    மதியம் 11.15 மணிக்கு விமானிகள் ரம்யா ரங்கராஜ், பிருந்தா நாயர் குழுவினர் கோவைக்கு விமானத்தை இயக்கினர். கோவையில் இருந்து 4.15 மணிக்கு இந்த விமானம் சென்னைக்கு வந்து சேரும்.

    பெண்களால் இயக்கப்பட்ட 3 விமானங்களில் பணியாளர்களும் பெண்களே நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பெண்களால் இயக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கும் பூங்கொத்து கொடுக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×