என் மலர்

  செய்திகள்

  பாசனத்துக்காக வரட்டுப்பள்ளம் நீர்தேக்கம் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
  X

  பாசனத்துக்காக வரட்டுப்பள்ளம் நீர்தேக்கம் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாசனத்துக்காக வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
  சென்னை:

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வேண்டுகோளினை ஏற்று வரட்டுப் பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வினாடிக்கு 90.72 மி.கன. அடி மிகாமல் 5-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திலுள்ள 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews
  Next Story
  ×