என் மலர்

  செய்திகள்

  திருமங்கலத்தில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
  X

  திருமங்கலத்தில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீட்டில் தனியாக இருந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  பேரையூர்:

  திருத்தங்கல்காட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது44). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா.

  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இவர்கள் பள்ளிக்கூடம் சென்று விட்டனர்.

  பூர்ணிமாவும் கடைக்கு சென்று விட சரவணன் வீட்டில் தனியாக இருந்தார். கடைக்கு சென்று திரும்பிய பூர்ணிமா கணவரை அழைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

  இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்தார். அங்கு சரவணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பூர்ணிமா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  அவர்கள் விரைந்து வந்து சரவணன் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews

  Next Story
  ×