என் மலர்
செய்திகள்

காவிரி நீர் பிரச்சினை: விருத்தாசலத்தில் மக்கள் அதிகார அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விருத்தாசலம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அங்கு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் ஜங்சன் சாலை, கடலூர் சாலை வழியாக விருத்தாசலம் ஸ்டேட் வங்க் வரை ஊர்வலமாக சென்றனர்.
அங்கு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காவிரி தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜ் தலைமை தாங்கினார். மக்கள் அதிகார அமைப்பு முருகானந்தம், செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #tamilnews






