என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சாலை விதிகளை மீறிய 92 வாகன ஓட்டுனர்களிடம் ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ராமலிங்கம் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலர், வெங்கடேஷ்வரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் போக்கு வரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 17 சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சாலை விதிகளை மீறிய 92 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வசூலானது.
Next Story






