என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து கிடைக்காத விரக்தியில் தறிப்பட்டறை அதிபர் தற்கொலை
    X

    சொத்து கிடைக்காத விரக்தியில் தறிப்பட்டறை அதிபர் தற்கொலை

    ஈரோட்டில் சொத்து கிடைக்காத விரக்தியில் தறிப்பட்டறை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, பழைய பாளையம், குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது48). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சரவணன் சொந்தமாக தறிபட்டறை வைத்து நடத்தி வந்தார். சரவணனுக்கு பூர்வீக சொத்து வர உள்ளது. அது கிடைக்கும் பட்சத்தில் தனது இரண்டு மகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்று நினைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் எதிர்பார்த்தது போல் சரவணனுக்கு சொத்து கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சரவணன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×