என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே டி.டி.வி. தினகரன் அணியினர் ஆலோசனைக் கூட்டம்
கந்தர்வகோட்டை அடுத்த கல்லாக்கோட்டையில் டி. டி.வி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மட்டங்கால், புதுப்பட்டி, வீரடிப்பட்டி, பெரியக்கோட்டை, நம்புரான்பட்டி, நாயக்கர்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, பல்லவராயன்பட்டி. நடுப்பட்டி ஆகிய 10 ஊராட்சி கழக செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கல்லாக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் ஒ.என்.பி. அப்துல்ரஜாக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி டி வி தினகரன் அணியின் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.செங் கொடியான் கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, புதிய கிளைகள் தொடங்குவது, பொறுப்பாளர்கள் நியமனம்,கட்சியின் எதிர்கால திட்டம் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோ.அண்ணாதுரை, அம்மா பேரவை சக்திவேல், அண்டனூர் முருகானந்தம், முத்து சிதம்பரம், முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள், வீரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.ஆர்.முருகேசன், மகாதேவன், கடம்பையன், கல்லாக்கோட்டை சுரேஷ், செந்தில்குமார், வாசுகி பொன்ராமன், வடுகப்பட்டி சந்திரசேகர் மட்டங்கால் பிரவின் உள்ளிட்ட 10 ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
Next Story






