என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே லாரி மோதி ஆட்டோ கவிழ்ந்தது: வாலிபர் நசுங்கி பலி
    X

    ஈரோடு அருகே லாரி மோதி ஆட்டோ கவிழ்ந்தது: வாலிபர் நசுங்கி பலி

    ஈரோடு அருகே லாரி மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பெரிய அக்ரகாரம் ஜோசப் தோட்டத்தை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 30). இவரது நண்பர்கள் சிவக்குமார், பழனி. இவர்கள் 3 பேரும் ஈரோடு ரெயில் நிலையத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இவர்கள் நேற்று இரவு ஒரு ஆட்டோவில் அரச்சலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அசோகபுரத்தில் வந்த போத ஒரு லாரி எதிரே வந்தது. திடீரென அந்த லாரி எதிர்பாராத வகையில் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து உள்ளே இருந்த 3 பேரும் வெளியே ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர்.

    அப்போது மோதிய லாரியின் சக்கரம் சிராஜூதீன் மீது ஏறி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொருவரான பழனி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×