என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் விநாயகர் கோவிலில் 6 கோபுர கலசங்கள் திருட்டு
    X

    விருத்தாசலம் விநாயகர் கோவிலில் 6 கோபுர கலசங்கள் திருட்டு

    விருத்தாசலம் விநாயகர் கோவிலில் 6 கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். திருடப்பட்ட 6 கலசங்களின் மதிப்பும் ரூ. 1 லட்சம் ஆகும்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத் தாசலம் திரு.வி.க.நகரில் பழமைவாய்ந்த கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் சங்கட சதுர்த்தியன்று சிறப்பு பூஜை நடைபெறும்.

    இந்தகோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று காலையும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் மூலஸ்தானத்தில் உள்ள கோபுரத்தில் ஒரு கலசமும், மற்ற கோபுரங்களில் இருந்து 5 கலசமும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவில் பூசாரியிடம் கூறினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று கலசங்கள் திருடு போன கோவிலை பார்வையிட்டனர்.

    கலசங்களை திருடியது யார்? அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருடப்பட்ட 6 கலசங்களின் மதிப்பும் ரூ. 1 லட்சம் ஆகும். #tamilnews
    Next Story
    ×