என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
    X

    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்து முழுமையாக தொடர்ந்து வேலை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வெற்றியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் போராட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்டக்குழு முத்துராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியத் தலைவர் பன்னீர்செல்வம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்து போராட்டம் குறித்து பேசினார். 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து குடும் பத்தினருக்கும் தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும், ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கும் வறட்சிக்கான 100 நாள் வேலையை வழங்கிட வேண்டும், வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை, கூலி கிடைக்கும் வகையில் தொழிலாளர் பட்ஜெட்களை தயார் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    முன்னதாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ஆணையர் சேகர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தனர். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி முடிவு எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×