என் மலர்
செய்திகள்

தேனி அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலி
தேனி:
தேனி அல்லிநகரம் சாலிமாரத்தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது90). இவர் சம்பவத்தன்று தேனி-பெரியகுளம் சாலையில் ஆஸ்பத்திரி அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் சம்பவத்தன்று ஆண்டிப்பட்டி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்ழியே நடந்து சென்ற 40 வயது மதிக்கத்தக்கவர்மீது இவர் மோதி உள்ளார்.
இதில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் கைலி வேட்டியும், நீலம், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். இது குறித்து தேனி க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






