என் மலர்
செய்திகள்

நாகர்கோவில் அருகே 2 பெண்கள் மாயம்
நாகர்கோவில் அருகே 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாயமான பெண்களை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த வடக்கு கண்ணக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 37). இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து ஜெயசீலன் பார்த்தபோது புஷ்பலதா அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை தேடி உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தார். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
ஈத்தாமொழி பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மகள் ஒரு வலை கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று அன்று வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story






