என் மலர்

  செய்திகள்

  கோயமுத்தூர் - மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஒரு மாதம் ரத்து
  X

  கோயமுத்தூர் - மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஒரு மாதம் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயமுத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.#Nilagiriexpress #southrailway #cancellation
  சென்னை:

  கோயமுத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

  மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையை 24 பெட்டிகளை கொண்ட ரெயில்கள் நின்று செல்லும் வகையில் நீளப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாலும், அங்குள்ள நடை மேம்பாலத்தை நவீனப்படுத்தி, மின்சார இணைப்பு பணிகள் செய்ய வேண்டியுள்ளதாலும், கோயமுத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து மார்ச் மூன்றாம் தேதிவரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனைதொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில் எண்: 12671 சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரெயில் எண்: 12672 சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் கோயமுத்தூர் - மேட்டுப்பாளையம் இடையிலான சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews #Nilagiriexpress #southrailway #cancellation
  Next Story
  ×