என் மலர்
செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை
வேலூர்:
காவேரிபாக்கம் தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 50). அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார்.அவரது மனைவி சுதா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்னைக்கு சென்றார். இரவில் வீடு திரும்பினார். வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க காசு மற்றும் 3 பவுன் மோதிரம் ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிவபிரகாசம் காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






