என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் இருந்து 5 ஆயிரம் பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரை
தேவகோட்டையில் இருந்து 5 ஆயிரம் பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தைப்பூசத்திற்கு செட்டிநாடு என்று சொல்லப்படும் தேவகோட்டையில் இருந்து சுமார் 150 வருடங்களுக்கு முன்பு பழனி முருகனை காண பாதயாத்திரையாக நகரத்தார்கள் செல்வார்கள்.
கார்த்திகை மாதம் முதல் விரதம் இருந்து முருகனை வேண்டி ஓவ்வொரு நாளும் பஜனை நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தேவகோட்டையில் உள்ள பத்தர்கள் தமிழகத்தில் பல இடங்களில் வசித்து வந்தாலும் விரதம் இருந்து தங்களின் பூர்வீக வீடுகளில் இருந்து காவடி தூக்கி பாதயாத்திரை செல்கிறார்கள்.
நேற்று காலை காவடிகள் நகர சிவன்கோவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும் ஓவ்வொரு வீடுகளின் முன்பு வாசலில் கோலம் போட்டு காவடிகளை வணங்கினார்கள். பின்பு இரவு சிலம்பனி விநாயகர் கோவிலில் தங்கி இன்று காலை காவடிகள் குன்றக்குடியை நோக்கி புறப்பட்டு சென்றது.
அதே போல திருவாடனை, தொண்டி, கரூர், கண்ணங்குடி, பெரியகாரை, சருகணி, ஆனந்தூர், தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் 5 ஆயிரத்துக்கும் மேற்டோர் பாதயாத்திரையாக சென்றனர்.
இன்று இரவு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட பத்தர்கள் குன்றக்குடியில் ஒன்று சேர்ந்து 6 நாட்கள் பயணம் செல்வார்கள். ஒவ்வொரு நாள் இரவு தங்கும் ஊர்களில் காவடி பூஜையும், வேல் பூஜையும் நடைபெறும்.
பழனி தண்டாயுதபாணியை வேண்டி பாதயாத்திரை சென்றால் புத்தியில் தெளிவும் மனதில் குழப்பம் இல்லாத நிலை உண்டாகும் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் செல்லுகிறோம் என்று யாத்திரிகர்கள் கூறினார்கள்.

Next Story