என் மலர்
செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்
கிருமாம்பாக்கத்தில் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் சாவடிகுளம் வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). விவசாயி. நேற்று மாலை மாட்டு பொங்கலையொட்டி சரவணகுமார் அங்கு ஊர் மக்கள் திரண்டு இருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் துரைராஜ் (30) என்பவர் சரவணகுமாரிடம் எனது பெரியம்மா எங்கே? என்று கேட்டார். அதற்கு சரவணகுமார் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு சொல்கிறேன் என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ் என்னிடமே உதாசீனமாக பேசுகிறாயே? என கூறி சரவணகுமாரை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
ஊர் மக்கள் மத்தியில் அவமானப்படுத்தியதால் இதுபற்றி சரவணகுமார் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர்.
Next Story