என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியர் திடீர் மாயம்
    X

    நெய்வேலியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியர் திடீர் மாயம்

    நெய்வேலியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் நெய்வேலி புதுநகரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் நெய்வேலியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 12-ந் தேதி சதீஷ்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சதீஷ்குமாரை திடீரென காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் சதீஷ்குமாரை தேடினர். அவர் வேலை பார்க்கும் பள்ளியில் சென்று விசாரித்தனர். ஆனால் சதீஷ்குமார் பற்றி எந்த வித தகவலும் இல்லை. இது குறித்து நெய்வேலி டவுன்சிப் போலீசில் சதீஷ்குமாரின் தந்தை ஏழுமலை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×