என் மலர்

  செய்திகள்

  கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் விடும் பிரச்சினை - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்
  X

  கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் விடும் பிரச்சினை - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு கலெக்டர் அலுவலக வளகாத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் விடுவது தொடர்பாக விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  ஈரோடு:

  ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

  இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக கொண்டு வந்தனர்.

  அப்போது கீழ்பவானி சங்க தலைவர் நல்லசாமி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடும் பிரச்சினை தொடர்பாக பேசும்போது மற்றொரு விவசாய பிரதிநிதி குறுக்கிட்டு பேசினார். இதனால் இருவருக்குமிடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் பிரபாகர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.

  இதை தொடர்ந்து அவர் கூறும்போது, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் அதிக வசூல் செய்யப்படுவதாகவும், அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பதாகவும், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.
  Next Story
  ×