search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக் காடுதுறை, என்.புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.

    வாழைத்தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூர வள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.800-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ரூ.5800-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.480-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ490-க்கும், மொந்தன் வாழைக்காய் ரூ.100-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×