என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  X

  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  மேட்டூர்:

  மேட்டூர் அணையில் இருந்து மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் பாசனத்திற்காக கடந்த 17-ந் தேதி 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

  இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. 13 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

  ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் இன்று காலை முதல் 8 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

  மேட்டூர் அணைக்கு நேற்று 284 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 273 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

  நேற்று 67.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 66.92 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

  Next Story
  ×