என் மலர்

  செய்திகள்

  பென்னாகரம் அருகே பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உள்பட 3 பேர் காயம்
  X

  பென்னாகரம் அருகே பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உள்பட 3 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பென்னாகரம் அருகே சாலையோரம் நடந்து சென்ற மாணவிகள் மீது பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.
  பாப்பாரப்பட்டி:

  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது அரையாண்டு விடுமுறையில் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

  இந்த சிறப்பு வகுப்பிற்காக பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளத்தை சேர்ந்த செல்வம் மகள் மோனிகா(வயது 16), மதன் மகள் அருள்பிரியா(16) ஆகிய இருவரும் இன்று காலை பள்ளிக்கு சாலையோரமாக நடந்து சென்றனர்.

  அவர்கள் செல்லும் வழியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுசுவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மாணவிகள் மோனிகா, அருள்பிரியா மற்றும் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமதி(40) ஆகிய 3 பேரும் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு ஓடி வந்து இடிந்து விழுந்த சுற்று சுவரை அகற்றி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த தொடக்கப்பள்ளி கட்டப்பட்டு 110 வருடங்கள் ஆகிறது. இப்பள்ளியின் சுற்று சுவர் கட்டி 90 வருடங்கள் ஆகியுள்ளன. பழமையடைந்ததால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விட்டது.

  எனவே பள்ளியை புதுப்பித்து கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.
  Next Story
  ×