என் மலர்

  செய்திகள்

  மன்னார்குடி அருகே நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ரூ.1 லட்சம் சேதம்
  X

  மன்னார்குடி அருகே நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ரூ.1 லட்சம் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மன்னார்குடி அருகே நள்ளிரவில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
  மன்னார்குடி:

  மன்னார்குடி பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகன் அருள் (வயது 16).

  இந்த நிலையில் நேற்று இரவு புஷ்பா உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் அருள் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வீட்டில் தீப்பிடித்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த அருள், திடீரென கண்விழித்து பார்த்த போது வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

  இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

  இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை, இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×