என் மலர்
செய்திகள்

கடலூர் மத்திய சிறைக்குள் புகையிலை பொருட்களை வீசிய சாராய வியாபாரி
கடலூர் மத்திய சிறைச்சாலைக்குள் இருக்கும் மனைவிக்கு மதில் சுவர் வழியாக புகையிலை பொருட்களை கணவரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் தீனா என்கிற தினகரன். சாராய வியாபாரி. இவருடைய மனைவி திருநாவுக்கரசி. இவர் சாராயம் விற்ற வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று திருநாவுக்கரசியை பார்க்க தினகரன் அவருடைய நண்பர் சுதாகருடன் கடலூர் மத்திய சிறைக்கு வந்து மனைவியை சந்தித்து பேசினார்.
அவருக்கு புகையிலை பொருட்களை தருவதாக தினகரன் கூறினார். பார்வையாளர்கள் இடத்தில் வைத்து அதை வழங்க முடியாது என்பதால், திருநாவுக்கரசியை ஜெயில் மதில் சுவர் அருகே வர சொல்லிவிட்டு தினகரன் தனது நண்பருடன் ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் அவர் ஜெயிலுக்குள் புகையிலை பொருட்களை வீசினார்.
இதை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் பார்த்தனர். உடனே தினகரனும், அவரது நண்பர் சுதாகரும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அதில் சுதாகர் மட்டும் போலீசில் சிக்கினார். தினகரன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரனை வலைவீசி தேடி வருகின்றனர். சிறைக்குள் இருக்கும் மனைவிக்கு மதில் சுவர் வழியாக புகையிலை பொருட்களை கணவரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story