என் மலர்
செய்திகள்

கூவத்தூர் அருகே கோவிலில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
கூவத்தூர் அருகே கோவிலில் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 22-ந் தேதி இரவு மர்ம கும்பல் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்தனர். அப்போது அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல் அதே பகுதியில் பல கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதையடுத்து கூவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவிலில் கொள்ளையில் ஈடுபட்டது மரக்காணத்தை சேர்ந்த சுதாகர், நெரும்பூர் ஆனந்த், பாண்டியன் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






