என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மி‌ஷம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது
    X

    நாகை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மி‌ஷம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

    நாகை பஸ் நிலையத்தில் தனியாக நின்றிருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்வேளூர்:

    நாகை வெளிப்பாளையம் பெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மனைவி பொன்மலர் (வயது30). இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி செல்ல பஸ் ஏற நாகை புது பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஜெகன் நாதன் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தனியாக நின்றிருந்த பொன்மலரிடம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்மலர் இதுபற்றி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காடம்பாடி சுனாமி குடியிருப்பு புதிய நம்பியார் நகரை சேர்ந்த காத்தலிங்கம் (28), கோகுலன்(18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் மைனர் என்பதால் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற 2 பேரையும் நாகை கிளை சிறையிலும் அடைத்தனர்.

    Next Story
    ×