என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு - தொழிலாளி ஆத்திரம்
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காரணத்தால் கார் டிரைவர் வெட்டிக்கொலை சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழஅகனி சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகன் கண்ணன் (வயது 32). கார் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அதே பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் எதிரெதிர் வீடு என்பதால் கண்ணனுக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனால் மனைவியின் கள்ளக்காதலை கலையரசன் கண்டித்தார். கண்ணனுடன் உள்ள தொடர்பை கைவிடும் படி கூறினார். இது தொடர்பாக கலையரசனுக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்தாண்டு கண்ணன், கள்ளக்காதலி கவிதாவை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். பின்னர் வெளியூரில் தங்கி இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதனால் கண்ணன் மீது கலையரசன் தீராத கோபத்தில் இருந்து வந்தார். மேலும் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கண்ணன் கீழ அகனி கிராமத்துக்கு வந்தார். இன்று காலை 9 மணியளவில் அப்பகுதியில் கண்ணன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் மறைந்திருந்து வந்த கலையரசன் திடீரென அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து பகுதிகளில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து கலையரசன் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கலையரசனை தேடி வருகின்றனர்.
கார் டிரைவர் இன்று காலை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story