search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக்
    X

    குடியாத்தத்தில் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக்

    குடியாத்தத்தில் ஜி.எஸ்.டி. வரியால் கைத்தறி தொழில் நலிவடைந்ததால் 10 ஆயிரம் நெசவாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் ஜி.எஸ்.டி. வரியால் கைத்தறி தொழில் நலிவடைந்ததால் 10 ஆயிரம் நெசவாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைத்தறி துணி உற்பத்தியின் அனைத்து ரகங்களிலும் விசைத்தறி உள்ளிட்ட நவீன எந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இருப்பினும், நவீன எந்திரங்கள் உற்பத்தி செய்ய முடியாத ரகங்களை, மனித தொழில் திறனால் மட்டுமே வழங்கி கொண்டிருக்கும் தனித்தன்மை வாய்ந்த நெசவாளர்கள், குடியாத்தம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

    விவசாயத்துக்கு அடுத்த படியாக குறைந்த முதலீட்டில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக கைத்தறி நெசவுத் தொழில் இருந்து வருகிறது. கைத்தறி நெசவுத்தொழில் குடிசை தொழிலாக தங்கள் வாழ்விடத்தில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகிறது. குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளை சேர்ந்த பலர் கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    குடியாத்தம் பகுதிகளில் மட்டும் 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் தனியார் மூலம் சுமார் 4 ஆயிரம் நெசவாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழிலை செய்து வருகிறார்கள்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கி, புடவை அல்லது துண்டு உள்ளிட்ட ஆடை ரகங்கள் வடமாநில ங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில், கைத்தறி தொழிலின் மூல பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதால் நெசவு தொழிலுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெசவு தொழில் முழுமையாக நலிவடைந்துள்ளது.

    இதனால் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 10 ஆயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. ஜி.எஸ்.டி. வரியால், கைத்தறி ஆடைகள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்றுமதியும் கடும் சரிவை சந்துள்ளது.

    வாங்க ஆள்ளில்லாமல், உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் தேக்கமடைந்துள்ளது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து குடியாத்தத்தில் 10 ஆயிரம் நெசவாளர்களும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்ட குழு அமைப்பாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்க இணைய தலைவர் ருத்திரன், எல்.பி.எப். பேரவை கவுன்சில் கோபால், பல கைத்தறி சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×