search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் அமெரிக்க என்ஜினீயர் விபத்தில் பலி
    X

    கோவையில் அமெரிக்க என்ஜினீயர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார். பெண் பார்க்க வந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
    கோவை:

    கோவை சின்னியம் பாளையம் அடுத்துள்ள ஆர்.ஜி. புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி (32). அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை வந்தார். நாளை அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தார். இதையொட்டி பழனி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு புறப்பட்டார். ஹோப் காலேஜ் அருகே சென்றபோது சவுக்குகட்டையால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வாயிலில் மோதி கீழே விழுந்தார்.

    அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வாகனம் ரகுபதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×