search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து 3 பேர் பலி: தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மீது வழக்கு
    X

    செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து 3 பேர் பலி: தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலத்தில் இருந்து கார் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் வழக்கில் தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    செங்குன்றம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி நவநீதம், மகள் பவித்ரா, மருமகன் அய்யப்பன்.

    இவர்கள் காரில் மீஞ்சூரில் நடந்த உறவினர் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த கந்தவேல் ஓட்டிச்சென்றார்.

    மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கார் சென்றபோது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கட்டி முடிக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தில் தவறுதலாக டிரைவர் காரை ஓட்டி சென்றார்.

    வேகமாக வந்த கார் குறிப்பிட்ட தூரம் சென்றதும் பாலத்தில் இருந்து கீழே தலைகுப்புற விழுந்தது. அங்கு சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கியது.

    இதில் பழனி, நவநீதம், பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உயிருக்காக போராடிய அய்யப்பன், கார் டிரைவர் கந்தவேல் ஆகியோரை அக்கம் பக்கத்தினர், போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கட்டி முடிக்கப்படாமல் பாலத்தின் நுழைவு பகுதியில் காங்கிரீட் தடுப்புகள் வைத்து இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் நடந்த சினிமா படப்பிடிப்புக்காக காங்கிரீட் தடுப்புகளை அகற்றி உள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்த பிறகு தடுப்புகளை நுழைவு பகுதியில் வைக்காமல் விட்டு விட்டனர். விபத்து குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில், மேம்பால பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகிறது. அந்த நிறுவனம் மேம்பால பணியை 6 சப்-காண்டிராக்ட் நிறுவனங்களுக்கு கொடுத்து இருக்கிறது.

    இதில் ஏ.ஆர்.எஸ். என்ற நிறுவனம் விபத்து நடந்த மேம்பால பணிகளை செய்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    337 (மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்), 302(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும், மேம்பாலத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து படப் பிடிப்பு நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×