என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டோர வீட்டில் லாரி மோதி விபத்து: ஆட்கள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்ப்பு
    X

    ரோட்டோர வீட்டில் லாரி மோதி விபத்து: ஆட்கள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்ப்பு

    பு.புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையோர இருந்த வீடு மீது லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்மவர் தேவராஜ். இவர் சத்தியமங்டகலம்- கோபி ரோட்டில் தனது தோட்டத்தில் சிறிய அளவிலான சாலை வீடு கட்டி அதில் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த வழியாக தேங்காய் மட்டைகள் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென நிலை தடுமாறி சாலை வீடு மீது மோதியது.

    இதில் அந்த சாலை வீடு இடிந்து நொருங்கியது. உள்ளே கட்டப்பட்டிருந்த 10 ஆடுகளில் ஒரு ஆடு சம்பவ இடத்தில் இறந்துவிட்டது.

    அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் இழப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×