என் மலர்
செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிராம நிர்வாக அதிகாரி பலி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிராமநிர்வாக அதிகாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே துவார் பகுதியை சேர்ந்தவர் பெரமைய்யா (வயது 35). இவர் கருக்காகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் துவாரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பெரமைய்யா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த பெரமைய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிராம நிர்வாக அதிகாரி பெரமைய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story