என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சியில் பஸ் மோதி துப்புரவு பணியாளர் பலி
    X

    மொடக்குறிச்சியில் பஸ் மோதி துப்புரவு பணியாளர் பலி

    மொடக்குறிச்சியில் அரசு பஸ் மோதி துப்புரவு பணியாளர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 23). இவர் கடந்த மாதம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

    இவர் சனிக்கிழமை காலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி அருகே குன்னாங்காட்டு வலசில் உள்ள தனது அக்கா கவிதாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது அய்யகவுண்டன் பாளையம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என புகார் கூறப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘விபத்து நடந்து நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவே இல்லை. பொதுமக்களுடைய நண்பன் என்று கூறும் போலீசார் பொதுமக்களை மரியாதைக்குறைவாக நடத்துகிறார்கள்.

    இதேபோல் பலமுறை செய்துள்ளனர். இனியும் தொடர்ந்தால் ஈரோடு எஸ்.பி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.

    Next Story
    ×