என் மலர்
செய்திகள்

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் பிணம்: போலீசார் விசாரணை
காவிரி ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொடுமுடி வட்டம் பாசூர் கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி பாசூர் தடுப்பணை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை. நீல நிற சர்ட், வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story