என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரி நிரம்புகிறது
    X

    நீர் வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரி நிரம்புகிறது

    வீராணம் ஏரிக்கு தொடர்ந்து 150 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், மொத்த கொள்ளளவு நிரம்புகிறது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகவும், நீர் ஆதாரமாகவும் இது உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.60 அடியாகும். இந்த ஏரிக்கு சாதார காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளான செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, தென்னங்குடி ஓடை ஆகியவை வழியாக தண்ணீர் வருகிறது.

    கடந்த 20-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் கல்லனைக்கு வந்ததும், கடந்த 5-ந் தேதி கல்லனை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழ்அணை வந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் வீராணம் ஏரியை வந்தடைந்தது.

    ஏரிக்கு தொடர்ந்து 150 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் மட்டம் 41.60 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 மி.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 12 மி.மீ., லால்பேட்டையில் 7 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
    Next Story
    ×