என் மலர்

    செய்திகள்

    திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார். அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கும் காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் மகேஸ்வரி இறந்தார்.

    திருமுருகன் பூண்டி பகுதியில் 100-க்கும் அதிகமானோர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.
    Next Story
    ×