என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
    X

    செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

    கீரனூ அருகே செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கீரனூர்:

    கீரனூர் உடையாளிப்பட்டி பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில், பேட்டரிகள் திருடு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. செல்போன் டவர்களில் இருந்த மொத்தம் ரூ.3லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகள் திருடு போனதாக மாத்தூர் மற்றும் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மதுரையை சேர்ந்த பொய்யாமொழி (வயது 53), கண்ணாங்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி(62) திருமலைராயபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் சிவக்குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த கீரனூர் போலீசார், 3 பேரையும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×