என் மலர்

  செய்திகள்

  விருதுநகர் அருகே ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி
  X

  விருதுநகர் அருகே ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்னி பஸ் மோதியதில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியானார்.
  விருதுநகர்:

  சிவகாசிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் இன்று அதிகாலை விருதுநகர் அருகே கே.உசிலம்பட்டி பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

  இதனை பார்த்த ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் வாலிபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

  தகவல் கிடைத்ததும் பாண்டியன் நகர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×