என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது: நாஞ்சில் அன்பழகன்
சென்னை:
தர்மபுரி மாவட்ட அ.தி. மு.க. சார்பில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளரும், சினிமா டைரக்டருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வில் தன்னை ஐக்கியப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். 1967 தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
அண்ணாவின் மறைவுக்கு பின்னால் தீய சக்திகளின் நடவடிக்கைகளால் தி.மு.க. விலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். அண்ணாவின் பெயரில் கட்சியை உருவாக்கினார். அ.தி. மு.க.வை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்க அயராது உழைத்தார்.
1977-ல் ஜார்ஜ்கோட்டை ஏறியவர் 3 முறை முதல்- அமைச்சராக கோட்டையில் கோலோச்சினார். தனது ஆட்சி காலத்தில் ஏழை மாணவர்கள் பசியாற சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். பல்வேறு சாதனை திட்டங்களை உருவாக்கி நல்லாட்சி புரிந்தார். அவரது வழிவந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சரித்திர நாயகனின் நல்லாட்சியை தொடர வித்திட்டார்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. பேரியக்கத்துக்கு பல்வேறு இன்னல்கள் எதிரிகளால் உருவாக்கப்பட்டது. ஆனாலும் எக்கு கோட்டையாக அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. அம்மா சொன்னது போல் நூறாண்டுகளை கடந்து அ.தி.மு.க. நல்லாட்சி தமிழகத்தில் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.