என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஈரோட்டில் கந்து வட்டி கொடுமை: கிட்னியை எடுக்க கணவரை கடத்தி சென்றுவிட்டதாக மனைவி புகார்
Byமாலை மலர்24 Oct 2017 11:34 AM IST (Updated: 24 Oct 2017 11:34 AM IST)
ஈரோட்டில் கந்து வட்டிக் கும்பல், கிட்னியை எடுப்பதற்காக தன் கணவரை கடத்திச் சென்றுவிட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:
கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் தீக்குளித்தனர்.
இதில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில் இதேபோல் ஈரோட்டில் ஒரு கந்து வட்டி கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கந்து வட்டிக்காரர்களால் என் கணவர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார். அவரின் கிட்னியை கேட்டு மிரட்டுகிறார்கள் என அவரது மனைவி பரபரப்பு புகார் கூறி உள்ளார்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 37).
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்த சம்பூர்ணம் அங்கு கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.
எனது கணவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. நான் ஒரு துணி நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு விஷால் (11) என்ற ஒரு மகனும், நிவேதா (13) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இருவரும் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தினறினோம். இதனால் என் கணவர் ரவி சிலரிடம் கடன் வாங்கினார்.
கடன் கொடுத்தவர்களுக்கு உடனடியாக கடனை கொடுக்க முடியாமல் அவர்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார். எனினும் கடன் கொடுத்தவர்கள் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தொந்தரவு செய்தனர்.
மேலும் எங்களின் குடும்ப ஏழ்மையை தெரிந்த கடன் கொடுத்த ஒருவர் என் கணவரிடம், “உனக்கு தான் 2 கிட்னி உள்ளதே ஒரு கிட்னியை தானம் செய்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். கிட்னியை விற்று என் பணத்தை கொடு. நானே கிட்னியை எடுக்க அழைத்து செல்கிறேன்” என்று கூறினார். என் கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை எனினும் என் கணவரை அவர் கடத்தி சென்று விட்டார். அவினாசியை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஒருவரும் என் கணவரை நிர்பந்தித்து அழைத்து சென்று விட்டார்.
இப்போது என் கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கடத்தி சென்று அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் கிட்னியை எடுக்க சேர்த்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் கந்து வட்டிகாரர்களிடமிருந்து என் கணவரை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனைவி சம்பூர்ணம் அந்த மனுவில் கூறி உள்ளார்.
இந்த பரபரப்பு புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் கூறி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story
×