என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு
    X

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று  (19.10.2017)  நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ரத்த பரிசோதனை மையத்தையும் பார்வையிட்டார்.

    காய்ச்சல் சரியான பின்னரும் கூடுதலாக இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருக்க  நோயாளிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தை  ஆய்வு  செய்த போது அங்கு துப்புரவு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து துப்புரவு பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக  ஒப்பந்த பணியாளர் சேதுராமனை நிரந்தர பணி நீக்கம்  செய்யுமாறு  உத்தரவிட்டார்.

    அதேபோல் ரத்த பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அமைச்சர்  24  மணி நேரமும் ரத்த பரிசோதனை மையத்தின் கவுண்டர்கள் செயல்படுவதற்காக ரூ.3 லட் சம் தொகை ஒதுக்கி உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை  அரசு  மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×